மதுரையில் வங்கி அருகே இளைஞர்களிடம் கைபேசி பறிப்பு
மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்;
காமராஜர் சாலையில் வங்கி அருகே சென்ற வாலிபரிடம் செல்போன்கள் பறிப்பு
மதுரை காமராஜர் சாலை மூப்பனார் தெருவை சேர்ந்தவர் புக்காராம் மகன் மகேந்திரன்( 22.) இவர் காமராஜர் சாலையில் தனியார் வங்கி ஒன்றின் அருகே சென்று கொண்டிருந்தார் .அப்போது இரண்டு வாலிபர் அவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல்போன்கள் பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் 13வது தெருவை சேர்ந்தவர் போஸ் மகன் பூமிநாதன்( 30.) இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்தார் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் நல அதிகாரி முத்துலட்சுமி அனைத்துமகளிர் காவல் நிலைல் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் பூமிநாதனை கைது செய்தனர்.
பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மனைவி பவளக்கொடி(45.) இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து பவளக்கொடியின் கணவர் பெருமாள் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை பைக் வாங்கி தர மறுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை
மதுரைஅருகே இளமனூர் காலனியை சேர்ந்தவர் அய்யனார் மகன் ஆகாஷ்( 17 ).இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பெற்றோரிடம் பைக் வாங்கி தரும்படி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர் .இதனால் மணமுடைந்த ஆகாஷ் அங்குள்ள சுடுகாட்டினருகே மயங்கி கிடந்தார் .உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை அய்யனார் சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவிட்ச் பெட்டியில் வயர் சொருகியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
மதுரைமேலூர் அருகே குறிச்சி பட்டி முத்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அரவிந்த் (13.) இவர் வீட்டில் சுவிட்ச்பெட்டியியில் வயரை சொருகியபோது சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து சிறுவனின் அப்பா ஜெயப்பிரகாஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் உயிரிழந்த சிறுவன் அரவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு: கணவர் தற்கொலை
மதுரை நாகமலை புதுக்கோட்டை முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து மகன் செல்வம்( 30.) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் . குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த செல்வம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி முத்துவள்ளி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் செல்வத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.