திருமங்கலம் ஒன்றியத்தில் மு.க .ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் மு. க. ஸ்டாலின் 69 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றியத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கொ. தனபாண்டியன் தலைமையில் இன்று கரடிக்கல் , மேல உரப்பனூர், சித்தாலை, ஆலம்பட்டி, இராயபாளையம், கீழ உரப்பனூர் ஆகிய ஊராட்சியில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கியும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர். ஜெயராஜ்,ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டி, ஆலம்பட்டி மோகன், கரிசல்பட்டி முத்துப்பாண்டி, கண்ணன் மற்றும் பழனி ,காண்டை முருகன், சுகு,பிரதாப், சுந்தரபாண்டி, திரளி கிளை செயலாளர் கோட்டையன், பொன்னம்மங்கலம் ஜெயபாண்டி, விருமாண்டி, குமார், பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.