சோழவந்தான் அருகே எம்ஜிஆர் பிறந்த தினம்
எம்ஜிஆர் உருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் அருகேயுள்ள கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு அதிமுக ஓபிஎஸ் அணி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் திரவியம் வீரபத்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் பேரூர் செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருப்பட்டி செந்தில் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் பரஞ்ஜோதி, ஈஸ்வரன், செல்லம் வார்டு செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், முருகன், கணேசன், வீராச்சாமி, பொன்னையா, தனவீரபாண்டியன், பால்பண்ணை ராஜேந்திரன் ,தவிடன், மன்னாடிமங்கலம் கந்தன் ,குட்லாடம்பட்டி ராஜேந்திரன், ஊத்துக்குளி ராஜேந்திரன், வர்த்தக அணி பாஸ்கரன், கல்லாணை, அண்ணாதுரை, விஜயன் ,திருப்பதி, வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.