சோழவந்தான் அருகே, ஆதி மாசாணியம்மன் கோவில் விழா..!
சோழவந்தான் அருகே வேட்டார்குளம் ஆதி மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.;
சோழவந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதிமாசாணிஅம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு, முதல்வாரம் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். வியாழக்கிழமை இரவு மயானபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை பக்தர்கள் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று சக்திகரகம் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. இதை த்தொடர்ந்து, கோவிலுக்கு வந்து பூஜையில் நடந்து. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, காடு பட்டி போலீஸார் செய்திருந்தனர்.