திருமங்கலம் கோயில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்;
கள்ளிக்குடி தாலுகா கெ.வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில்
திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி வரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கெ.வெள்ளாகுளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது.இதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இரவு கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தாராம்.அதனை கண்ட கிராம மக்கள் ராதாகிருஷ்ணனுக்கு கிராம பாாணியில் தக்க பாடம் புகட்டி நடந்த் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், ராதாகிருஷ்ணன் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.