madurai town crime news மதுரை மாநகரத்தின் க்ரைம் செய்திகள் பூட்டிய வீட்டில் பணம் , நகை கொள்ளை

madurai town crime news மதுரை மாநகரில் பூட்டிய வீட்டை உடைத்து பணம், நகை எடுத்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-08-26 15:28 GMT

பூட்டை  உடைத்து 14 பவுன் தங்க நகைகள் பணம் கொள்ளை :

மதுரைதிருநகரில் ,வீட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 20ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.திருநகர் வெங்கடேஸ்வரா நகர் லயன் சிட்டி எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் பீட்டர் இன்பராஜ் 58. இவர் சம்பவத்தன்று, குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்திருந்த பதிமூன்றே முக்கால் பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 20 ஆயிரத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்று விட்டதுதெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து, இமானுவேல் பீட்டர் இன்பராஜ், திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

                                                             ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி 

மதுரை சீமான் நகர் நூல் பட்டறைத் தெருவை் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி (42). இவர், கொத்தனார் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டின் மாடியில் கைப்பிடி சுவரின் மீது அமர்ந்திருந்தார். அப்போது ,சுமார் 15 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் கீழே கிடந்த பட்டரை கல்லில் தலைக்குப்புற விழுந்ததில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது. இந்த நிலையில் உயிருக்கு போராடிய ஆறுமுக பாண்டியை, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ,செல்லும் வழி யிலேயே ஆறுமுக பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, மனைவி மரகதவல்லி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொத்தனார் ஆறுமுக பாண்டியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                            ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தனக்கன்குளத்தில்:

மதுரை தனக்கன்குளம் கார்த்திகா நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் உதய்( ௨௮). இவர் சம்பவத்தன்று வீட்டில் மாடிக்கு தூங்கச் சென்றார். இந்த நிலையில் மறுநாள் காலை பார்த்தபோது அவர் மாடியில் காணவில்லை. பக்கத்து வீட்டில் காம்பவுண்ட் சுவர் அருகே விழுந்து இறந்து கிடந்தார் .இது குறித்து, அவருடைய தந்தை ரங்கராஜ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு்ப்பதிவு செய்து வாலிபர் விஜய் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது அவரது சாவுக்கு வேறு காரணங்கள் உள்ளதா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                       '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 பாம்பு கடித்து  பெண் இறப்பு 

மதுரை ஐராவதநல்லூர், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜெயமேரி( 55). இவர் சத்துணவு கூடத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.சம்பவத்தன்று ஐராவத நல்லூர் கல்லறைத் தோட்டத்தில் கீரைபறித்துக் கொண்டிருந்தார். அப்போது ,அவரை விரியன் பாம்பு கடித்து விட்டது .இதனால், உயிருக்கு போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, கணவர் ஜேசுராஜா தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமேரியன் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News