மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில் சேவை தொடக்கம்

மதுரை- ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Update: 2021-10-08 05:45 GMT

இதுகுறித்து தென்னக ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

19 மாதங்களுக்கு பின்னர் ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் சேவை இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு காலை 09.30 மணிக்கு மதுரை வந்தடைந்தது. மறுமார்க்கத்தில் மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News