மதுரை ரயில்வே மைதானத்தை பார்வையிட்டகம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்
Madurai Railway Ground Visited இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை திடீரென ஆய்வு செய்தார்.;
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மற்றும் இஸ்கஃப் தேசிய செயலாளர் பாஸ்கரன் ரயில்வே மைதானத்தை ஆய்வு செய்தார்.
Madurai Railway Ground Visited
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளரும் இஸ்கஃப் தேசிய செயலாளருமான பாஸ்கரன் தலைமையில், இஸ்கஃப் மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமாராவ், தாமஸ், உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர், மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை பார்வையிட்டனர்.
இதில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு வணிக நோக்கில் குத்தகைக்கு விடும் முயற்சியில் இரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் மையமான இடங்களில் மக்களின் ஆண்டாண்டு கால பயன்பாட்டிற்காக இருக்கும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் இந்த முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மதுரை உறுப்பினர் உட்பட பலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில், இப்பொழுது மதுரையில் அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்திற்கும், ரயில்வே காலனியில் உள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்களை வணிக பயன்பாட்டிற்காக தனியாருக்கு வழங்க இந்த நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு ரயில்வே மேம்பாட்டு ஆணையம் ,மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், இரண்டு கட்டங்களாக ரயில்வே நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அரசரடி ரயில்வே மைதானம், இதன் அளவும் 11.45 ஏக்கர். இரண்டாவது கட்டமாக ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலம். இதன் அளவு 29.16 ஏக்கர். மொத்தம் 40.61 ஏக்கர்.இதன், இன்றைய சந்தை மதிப்பு சுமார் 1200 கோடியாகும். பெரும் சொத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மற்றும் இஸ்கஃப் தேசிய செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் :-
அரசரடி ரயில்வே மைதானம் தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தை தொடர்ந்து குரல் எழுப்பி வரும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை நாங்கள் ஆதரித்து வருகிறோம். மதுரையில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்திற்கும் காலனியில் உள்ள ரயில்வே நிலத்திற்கும் பேராபத்து வந்துள்ளது.
வணிக பயன்பாட்டுக்காக தனியாருக்கு வழங்கும் நிலங்களை தங்கள் வசம் ஒப்படைக்குமாறு ரயில்வே நிலைய மேம்பாட்டு ஆணையம் மதுரை ரயில்வே கோட்டத்தை கேட்டு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக பரிந்துரைக்கப்படுவதாக அறிகிறோம். ஆகையால் ,மத்திய பாஜக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என ,இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.