மதுரை மாவட்ட கோயில்களில்அமாவாசை மற்றும் கந்த சஷ்டி சிறப்பு பூஜை வழிபாடு
Madurai District Temple Special Pooja அமாவாசை மற்றும் கந்தசஷ்டியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் ளசிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.;
Madurai District Temple Special Pooja
மதுரை நகரில் அம்மாவாசை முன்னிட்டு, மதுரை மாவட்டத்திலுள்ள பல கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. மதுரை மாநகரிலுள்ள ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.மதுரை அண்ணா நகர், வைகை காலனி வைகை விநாயகர், மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ,தாசில்தார் நகர் சித்தி விநாயகர் உள்ளிட்ட கோயில்களில், அம்மாவாசை மற்றும் கந்தசஷ்டியை ஒட்டி, இக்கோவிலில் அமைந்துள்ள பாலமுருகன் மற்றும் ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை வழிபாடுகளும் ஆஞ்சநேயருக்கு வடமாலை அணிவித்தும் ,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கி விநாயகர் திருக்கோவிலில், இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பாலமுருகன், நரசிம்மர் ஆகியோருக்கு பக்தர்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது .
இதை அடுத்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல ,மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், கந்த சஷ்டி முன்னிட்டு பாலமுருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம். வி. எம். மணி, வள்ளிமயில், கோவில் செயல் அலுவலர் அலுவலர் இளமதி, கணக்கபூபதி ,எழுத்தர் வசந்த் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.