மதுரை மாவட்டத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் 75 % முதல் 90 % வரை நிரம்பி இருக்கின்றன. இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது

Update: 2021-11-28 03:15 GMT

மதுரை வைகை ஆற்றில் புரண்டோடும் மழை நீர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: மதுரை மாவட்டத்திற்கு 400 மி.மி மழையளவு பொழிந்திருக்க வேண்டும். ஆனால், தற்பொழுதுவரை 350 மி.மி மழையளவே பொழிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. தொடர்ச்சியாக பொழிந்த மழையினால், பல இடங்களில் 100 மி.மி மழையளவு வரை பொழிந்துள்ளது. மேலூர் பகுதிகளில் தொடர்ந்து பொழிந்த மழையின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிரம்பி இருக்கின்றன. தற்பொழுதுவரை இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது.

வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் வைகை ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக, பெய்த மழையினால் மேலூர் பகுதிகள் மற்றும் ஒரு சில ஊரக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மேலூர் அருகே கச்சிராயன்பட்டி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசிக்கும் 450-க்கும் மேற்பட்ட நபர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் , வேஷ்டி மற்றும் சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மதுரை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 33 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அளவுக்கு அதிகமாக மழையளவு பொழிந்தாலும் அவற்றை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

பெரியார் பிரதான கால்வாய் வடிநில கோட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 1012 கண்மாய்களில் 502 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 342 கண்மாய்கள் 76 முதல் 99 சதவீதமும், 140 கண்மாய்கள் 51 முதல் 75 சதவீதமும் மற்றும் 28 கண்மாய்கள் 26 முதல் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

பெரியார் வைகை வடிநில கோட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 210 கணமாய்களில் 98 கால்வாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. 35 கால்வாய்கள் 76 முதல் 99 சதவீதமும், 18 கால்வாய்கள் 51 முதல் 75 சதவீதமும், 21 கால்வாய்கள் 26 முதல் 50 சதவீதமும் மற்றும் 31 கால்வாய்கள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர், 58 கிராம பாசன கால்வாய் புனரமைக்க ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

58 கிராம பாசன கால்வாயில் புனரமைக்கும் பணியில் பிரதான கால்வாயில் நெடுக்கை 4460 மீட்டர் முதல் 11650 மீட்டர் வரை, நெடுக்கை 12450 மீட்டர் முதல் 14500 மீட்டர் வரை, நெடுக்கை 17900 மீட்டர் முதல் 19400 மீட்டர் வரை, நெடுக்கை 24645 மீட்டர் முதல் 27635 மீட்டர் வரை மற்றும் வலது புற பிரிவு கால்வாய் நெடுக்கை 2000 மீட்டர் முதல் 3500 மீட்டர் வரை, நெடுக்கை 4500 மீட்டர் முதல் 9930 மீட்டர் வரை, இடது புற பிரிவு கால்வாய் நெடுக்கை 800 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை மற்றும் புதுக்குளம் பிரிவு கால்வாய் நெடுக்கை 0 மீட்டர் முதல் 6050 மீட்டர் வரை, சிமெண்ட் கான்கிரீட் வாய்க்கால் அமை்பபது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

58 கிராம பாசன கால்வாயில் புனரமைக்கும் பணி மேற்கொண்டால் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள 35 கண்மாய்களின் மூலம் 2284.86 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்க குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால், உசிலம்பட்டி வட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 1912 ஹெக்டேர் நிலமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 373 நிலமும் என மொத்தம் 2785 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 58 கால்வாயில் இருந்து தண்ணிர் திறந்து வைக்கப்பட்டது.

பொதுப் பணித்துறையினரிடம், கண்மாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்றி கனமழையில் உபரியாக வரக்கூடிய நீரிணை தேக்கி வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகாத வண்ணம் குளம் மற்றும் கண்மாய்களை கண்காணிக்கப்பட வேண்டும். தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காத வண்ணம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார வாரியம் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மின் கம்பங்கள் அல்லது மின் கம்பிகள் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சரிசெய்திட ஏதுவாக உரிய உபகரணங்களுடன், பணியாளர்களுடனும் தயார் நிலையில் இருக்க தக்க நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பருவ கால நோய்கள் டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் பரவாமல் தடுக்கவும், குடிநீரின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இடிமின்னல் மற்றும் மின்கசிவு மூலம் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும். இதற்கான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும்  வாக்காளர் சிறப்பு முகாம் வாக்கு சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இம்முகாமினை, 18 வயது நிரம்பிய அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 1200 இடங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாபெரும் இச்சிறப்பு முகாமில், கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News