மூதாட்டி விபத்தில் உயிரிழப்பு உள்பட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்
மூதாட்டி விபத்தில் உயிரிழப்பு உள்பட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.;
மதுரை ரயில்வே நிலையம் அருகில் சாலையை கடந்த மூதாட்டி வாகனம் போது பலியானார்.
விருதுநகர் மாவட்டம் சூளைக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (வயது 83.). இவர் மதுரை ரயில்வே நிலையம் அருகே தியேட்டர் ஒன்றின் முன்பாக சாலையை கடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலமாக அடிபட்டது. பலத்த காயங்களுடன், வெள்ளையம்மாளை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வெள்ளையம்மாளின் மருமகள் சாந்தி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தற்கொலை
மதுரை அருகே பொதும்பு நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அழகப்பன் (வயது 20.)இவர், பிஏ படித்து வந்தார். படிப்பை தொடர முடியவில்லை. இதனால், அலங்காநல்லூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தந்தை பால்ராஜ் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்ட அழகப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்து அழகப்பனின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தற்கொலை
திடீர் நகர் நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் அழகப்பன்( 58.)இவர் ,ஒரு வருடமாக குடும்பத்திற்கு செல்லாமல் நினைத்த இடத்தில் தங்கியிருந்து கிடைத்த உணவை உட்கொண்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பில் போலீஸ்பூத் அருகே உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதனால், தீயில் கருகிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகப்பன் உயிரிழந்தார். இது குறித்து, அவருடைய அண்ணன் பாண்டி கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப் பதிவு செய்து, அழகப்பனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து தொழிலாளி சாவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அம்பலத்தடி மேல வெல்லூரை சேர்ந்தவர் ஐயப்பன்( 49 .). இவர் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் ஒரு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இதனால், சொந்த ஊருக்கு சென்று வரமுடியாமல் மேல மாரட் வீதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் முதல் தளத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதாலும் சரியான வேலை கிடைக்காமல் இருந்ததாலும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.இதனால், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து, மனைவி மாதா திடீர் நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐயப்பனின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.