வீடு புகுந்து 8 பவுன் நகை திருடிய இரண்டு பேரை கைது செய்த போலீசார்

மதுரையில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-05-17 07:45 GMT

பைல் படம்

வீடு புகுந்து 8 பவுன் நகை திருடிய இரண்டு பேர்  கைது 

மதுரை ஆனையூர், விநாயகர் கோவில் தெரு ஆறுமுகம் மகன் முருகன் 54. சம்பவத்தன்று இவரது வீடு புகுந்த மர்மநபர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த செயின் மற்றும் மோதிரம் உட்பட எட்டு பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.இந்த திருட்டு குறித்து முருகன், கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து. இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி 28, அண்ணா நகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார் 28. ஆகிய இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

வட்டி தகராறில் தனியார் நிறுவன அதிகாரிக்கு கத்திக்குத்து: திமுக பிரமுகரிடம் விசாரணை.

மதுரை தெற்கு வாசல் ஜான்சி எலக்ட்ரிகல்நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் 45 .இவர், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் 59 என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கடன் பெற்றுள்ளார் .இவர் திமுக பிரமுகர்ஆவார்.பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள்கடன்தொகையை கணக்கு செட்டில் பண்ணுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் ஆபாசமாக பேசி கையால் தாக்கியும் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சையது அப்துல் கபூர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் தி.மு.க பிரமுகரும் பைனான்சியருமான சைவம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது செயின் பறிப்பு

மதுரை வடக்கு வாசல் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் 52. இவர் தன்மகளை பின்னால் அமர வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் அரசரடி மகபூப்பாளையம் பகுதியில் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து சென்ற பைக் ஆசாமிகள் மகள் அணிந்திருந்த 4 கிராம் டாலர் சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேஷ் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.

ஜெய்ஹிந்த்புரத்தில் வாளைக்காட்டி வாலிபருக்கு மிரட்டல்: ஒருவர் கைது .

மதுரை  மீனாட்சி நகர் கேட்லாக் ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் 20 .இவர் ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெரு ஏழாவது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சுந்தரபாண்டியன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் 47 ஆகிய இருவரும் வழக்கு பதிவு செய்து பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.

கீரைத்துறையில்  வாளுடன் இருந்த  வாலிபர் கைது

மதுரை   கீரைத்துறை பகுதியில்  காவல் உதவி ஆய்வாளர்  செல்வம்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கி நின்ற வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீஸ்வரன் 20 என்று தெரிய வந்தது. அவரையும் அவர் வைத்திருந்த பைக்கையும் போலீசார் சோதனை செய்தனர்.அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார் அதை பறிமுதல்செய்து மேலும் விசாரணை செய்தனர் அப்போது அந்தப்பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் திட்டத்தில் அவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News