கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்: இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு

திருமங்கலம் அருகே கிராம மக்களுக்கு ரூ.20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஐ.ஒ.சி நிறுவனம் அமைத்துள்ளது

Update: 2021-08-18 07:00 GMT

கப்பலூர் ஊராட்சி, சொக்கநாதன்பட்டி கிராமத்தில் ஐஓசி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கிராம மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று முறைப்படி கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. 

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில், செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம்,  கப்பலூர் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதன்பட்டி கிராமத்தில்  குடிநீர் பற்றாக்குறை இருப்பதை அறிந்து, தங்கள்  நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை நிறுவியது.  மக்கள் குடிநீரை வீணாக்காமல் இருப்பதற்காக, கார்டு மூலமாக தண்ணீர் பிடிக்கும் இயந்திரத்தை நிறுவி சொக்கநாதன்பட்டி கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன மண்டல பொது மேலாளர் ஸ்ரீஹரி நாத் தலைமை வகித்து  தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு  தொடங்கி வைத்தார்.  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாடு தொடர்பாக,  கப்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணனிடம், இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் முறையாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ரூ.  20 லட்சம்  மதிப்பில்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை வழங்கிய  இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு  கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News