மதுரை அருகே லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
மாதம் தோறும் 1000 முதல் 2000 வரை வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் பெற்றுள்ளார்;
தற்காலிக ரேஷன் கடை ஊழியரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மீது துறை நீதியான நடவடிக்கைக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தாலுகா பகுதியில், கூட்டுறவு சொசைட்டி உட்பட்ட 92 நியாயவிலைக் கடைகள் உள்ளன . இந்தக் கடைகளில் தற்காலிக ஊழியர்கள் உட்பட 45 பேர் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களிடம் இருந்து, மாதம் தோறும் 1000 முதல் 2000 வரை வட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி ( 53 ) லஞ்சம் பெற்றுள்ளார் .
இது குறித்து, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில், எஸ்ஐ குமரகுரு உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட போலீசார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர் .இரண்டு மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில், வட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி இடம் கணக்கில் வராத 51 ஆயிரம் இருந்துள்ளது . இதனை கைப்பற்றிய போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி கைது செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.