வீடுகளில் கொள்ளையடித்தவர்கள் கைது: ரூ. 7 லட்சம் பெறுமான பொருட்கள் மீட்பு
7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், லேப்டாப் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலத்தில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது
மதுரை மாவட்டம் ,திருமங்கலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடித்த மூன்று நபர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்து 7 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தாலை , கட்ராம்பட்டி, மைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து பணம்,நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ,போலீசாரிடம் புகார் செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், பேரையூர் பகுதியைச் சேர்ந்த ராஜாகனி, சுந்தரம் மற்றும் தங்கபாண்டி ஆகியோரை போலீசார் விசாரித்ததில், அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, டிஎஸ்பி வினோதினி உத்தரவின் பேரில் , குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், லேப்டாப் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.