மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகையால் பரபரப்பு
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது;
மதுரை தல்லாகுளம் காவல் நிலையம்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் புகார் தொடர்பாக விசாரணைக்கு வருவதாக தகவலையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஸ் பாபுவிடம் அளவுக்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரி ரூ.20 லட்சம் பெற்றார். இதனை, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரி அன்கிட் திவாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் ,லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக அங்கி திவாரி வீடு மற்றும் மதுரையில் உள்ள மரக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கடந்த 1ம் தேதி அன்று சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை மதுரை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதியின்றி உள்ளே நுழைந்து பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் சங்கர் ஜுவாலிடம், மதுரை மண்டல அமலாக்க பிரிவு உதவி ஆணையர் பிரிஜேஸ் பணிவால் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, தல்லாகுளம் காவல் நிலையத்தில் (இன்று) (26.12.23) விசாரணை நடைபெறுவதை யொட்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தல்லாகுளம் போலீஸார் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால் இன்று காலை முதல் தல்லாகுளம் காவல் நிலையத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.