மது அருந்த பணம் தர மறுத்த நண்பரைத்தாக்கியவர் கைது

மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்

Update: 2021-09-12 13:03 GMT

பைல் படம்

மது அருந்த பணம் தர மறுத்த நண்பரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு:

மதுரை, முனிச்சாலை இஸ்மாயில்புரம் பத்தாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(54).இவரது நண்பர் புதூரைச் சேர்ந்த பாஸ்கர்  மது அருந்துவதற்காக சுரேஷிடம்  பணம் கேட்டார். பாஸ்கர்   மறுத்து விட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர் தாக்கியதில் சுரேஷ் காயமடைந்தார். இது தொடர்பாக, தெப்பக்குளம் போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

தெற்கு வாசலில் கணவர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை பந்தடி எட்டாவது தெரு அருகே பால்மால் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (52 ). மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.அவரை, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்திரசேகர்  உயிரிழந்தார்.இது குறித்து, தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வைகை ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு:

மதுரை ஆரப்பாளையம் சோனையா கோவில் அருகே வைகை ஆற்றில் ஆண் பிணம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்த, கிராம உதவியாளர் சந்தான முருகேசன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இறந்தவர் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்தனர். அவர் யார் ?எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

அண்ணா நகரில் தவறி விழுந்த பெயிண்டர்  உயிரிழப்பு:

மதுரை அண்ணாநகரில், வேலை செய்தபோது தவறி விழுந்து பெயிண்டர்  உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாநகர் மேலமடை நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 49). பெயிண்டராக வேலை பார்த்து வந்த  இவர், அண்ணாநகர், யாகப்பா நகர், சர்ச்ரோட்டில் உள்ள வீட்டில்  பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி தடுமாறி கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News