மதுரையில் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறி செய்த இளைஞர் கைது
மதுரையில் நடந்த குற்றசம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;
கட்டிட காண்ட்ராக்டரை மிரட்டி கத்தி முனையில் வழிப்பறி வாலிபர் கைது
மதுரை ஜூன் 20 மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பானுகோபன்36. இவர் கட்டிட காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500ஐ வழிப்பறி செய்துவிட்டார் .இந்த சம்பவம் குறித்து பானு கோபன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய் 27 என்ற வாலிபரை கைது செய்தனர்.
மஹால் அருகே வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
மதுரை தெற்கு வாசல் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மகால்அருகே நான்காவது தெருவில் சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர் .அந்த வாலிபரிடம் விசாரித்தபோது காளவாசல் பாண்டி மகன் நாகேந்திரன் 19 என்று தெரிய வந்தது .இவர் எதற்காக வாளுடன் சுற்றித்திரிந்தார் என்ன திட்டத்தில் திரிந்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் மோசடி:போலீஸ் விசாரணை .
கோயம்புத்தூர் சூலூர் தாலுகா அரசூரை சேர்ந்தவர் நல்லையா மகன் ராமசாமி 43. இவரிடம் வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்த குணாளன் மகன் ராஜா என்பவர் நண்பராக அறிமுகமானார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ராமசாமியிடம் கூறியுள்ளார். இதற்காக ஒருவருடத்திற்கு முன்பு ரூபாய் 4,95,000 பெற்றுள்ளார். இந்த பணத்தை வில்லாபுரத்தில் ராஜா வீட்டில் வைத்து கொடுத்துள்ளார்.
அவர் பணம் பெறும் போது வெங்கடேசன் என்பவரும் உடன் இருந்துள்ளார். பின்னர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டபோது வாங்கிய பணத்தில் ரூ 2லட்சத்து ஐம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவந்துள்ளார். இது குறித்து ராமசாமி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் ராஜா மற்றும் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் போக்சோ விசாரணை கைதி திடீர் மரணம்
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி பழைய நூலாக தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் 63 .இவர் சில வாரங்களுக்கு முன்பு போக்சே சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. மதுரை சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் கைதி மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி முனீஸ் திவாகர் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிமனோகரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு வாசலில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் எட்டாவது தெருவை சேர்ந்தவர் சண்முகராஜன் மனைவி கஸ்தூரி 34. வெளியே சென்று விட்டு வீட்டு வாசலில் தான் ஓட்டிச் சென்ற மொபட்டை நிறுத்தினார் .அப்போது பைக்கில் வந்த ஆசாமி அவர் அணிந்திருந்த செயினை பிடித்து இழுத்து பறிக்க முன்றார். இதனால் கஸ்தூரி கூச்சல் போட்டார் .அவர் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதனால் செயினை பறிக்காமல் தான் ஓட்டிச் சென்ற பைக்கை போட்டுவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இந்த சம்பவம் குறித்து கஸ்தூரி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறிக்க முயன்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
10 லட்சம் கடன் வாங்கித்தருவாதக்கூறி மூன்று லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை
மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி ஆசாரி தெரு, உதய பாண்டி மனைவி காயத்ரி 29 .இவரிடம் மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் 10 லட்சம் லோன் வாங்கி தருவதாக பேசி அதற்கு முன் பணமாக மூன்று லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த தொகையை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே கொண்டு வந்து தரும்படி கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பி காயத்ரி மாட்டுத்தாவனி அருகே வந்து மீண்டும் அவரிடம் அந்த நம்பரில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அவர் டுவார்டு ஆபீஸ் வாசல் முன்பாக நிற்பதாக கூறியுள்ளார். காயத்திரி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு சிலர் நின்றுகொண்டிருந்தனர்.அவர்களில் செல்போனில் பேசிய நபர் ஙரவணன் என்றும் அவருடன் செல்வம் என்பவரும் மேலும் சிலரும் நின்றனர். அவர்களில் சரவணனிடம் ரூபாய் மூன்று லட்சத்தை காயத்திரி கொடுத்துள்ளார்.பின்னர் 10 லட்சம் குறித்து கேட்டுள்ளார்.அப்போது அவரிடம் நைசாக பேச்சுக் அவரது கவனத்தை திசை திருப்பி அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.பின்னர் இந்த சம்பவம்குறித்து காயத்ரி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் மோசடி செய்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.