மதுரை அருகே கத்திக்குத்து: இரண்டு பேர் கைது

மதுரை நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-06-18 13:00 GMT

சிந்தாமணியில் வாலிபர்களிடையே மோதல் கத்திக்குத்து:இரண்டு பேர் கைது

மதுரை சிந்தாமணி வ. உ. சி. இரண்டாவது தெரு சேகர் மகன் சுரேஷ்38. அதேபகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் அருண்குமார் 25. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.இந்த நிலையில், வாய் தகராறும் ஏற்பட்டது.

இதில், தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவருடன் நண்பர் அழகு சுந்தரம் மகன் சுரேஷும் ஆபாசமாக பேசி தாக்கி கத்தியால் குத்திஉள்ளனர்.இந்த சம்பவம் குறித்து ,சுரேஷ் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து.அவரை தாக்கி கத்தியால் குத்திய அருண்குமார் 25, அழகு முத்துப்பாண்டி 21. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் விஜயன் மகன் மணிகண்டன் 28. இவர், இளம் பெண் ஒருவரை காதலித்தார்.அவருக்கு திருமண ஆசை காட்டி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவரை, கொடைக்கானல் லாட்ஜ்லும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள கோவிலிலும் வைத்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறை செய்தாராம்.. பின்னர் ,அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் மதுரை அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார், மணிகண்டன் 28. அம்மா மல்லிகா 55. மைத்துனர் சிவகுமார் 35 .ஆகிய மூன்றுபேர் மீது வழக்கு ப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

நோய்க்கு மருந்து சாப்பிடாத நிலையில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை:

மதுரை, புது விளாங்குடி அண்ணா தருவை சேர்ந்தவர் சுரேஷ் 40. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மண அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக அதற்கான மருந்து எதுவும் சாப்பிடவில்லை.இதனால் மேலும், மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இந்த சம்பவம் குறித்து, அப்பா முத்து சோனை கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய வாலிபர் வீட்டு வாசற்படியில் தவறி விழுந்து  உயிரிழப்பு 

மதுரை , கருப்பாயூரணி கம்மாபட்டி பாண்டி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வைகை ராஜா மகன் சௌந்தரபாண்டி 27. இவர் கடந்த ஜனவரி மாதம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் வாசற்படியில் நடந்து சென்ற போது தவறி விழுந்து மேலும் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சௌந்தரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து, அவருடைய தம்பி சுந்தர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் சௌந்தரபாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுமலையில் நட்சத்திர ஓட்டலில் செல்போன் திருட்டு:ஆந்திரா வாலிபர் கைது

மதுரை பசுமலையில், நட்சத்திர ஹோட்டலில் செக்யூரிட்டி மேனேஜராக எல்லப்பா 56. பணியாற்றி வருகிறார் .இவர், பணியில் இருந்தபோது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த செல்போனை திருடமுயன்றார். அப்போது, அவரை செக்யூரிட்டி மேனேஜர் கையும் களவுமாக பிடித்தார். அவரை சுப்பிரமணியபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்பரோடாசீனு மகன் பரோடாசுதீர் 23 என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே  ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி பயணி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி 52 .இவர் தன் மனைவி பத்மா உடன் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார். அவருடன் மேலும் சில பயணிகள் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற ஆட்டோ டிபி மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி விபத்தானது .இந்த விபத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணம் செய்த மனைவி பத்மா ,ஆட்டோ டிரைவர் முருகன், பயணி அமுதா ,கார்த்திக் மனைவி பிரனவி ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உயிரிழந்த பாண்டியின் மனைவி பத்மா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர்செக்காணூரணியை சேர்ந்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News