மதுரையில் வேன் மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு
மதுரையில் நடைபெற்ற குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்;
வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் மரணம்
மதுரை கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் 62. இவர், தெற்குவெளிவீதி தவுட்டு சந்தை அருகே சைக்கிள் ஓட்டிச் சென்றார் .அப்போது, அந்த வழியாக சென்ற வேன் மோதி படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில், அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் ராமதாஸ் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து, அவருடைய மகன் அரவிந்தகுமார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார், வேன் டிரைவர் மேல சக்குடி கருப்பசாமி மகன் அருண்குமார் 20 மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு வாசல் சின்னக்கடை வீதியில் வீடு புகுந்து 36 பவுன் நகை திருட்டு
மதுரை சின்னக்கடை வீதி எழுத்தாணி கார தெருவை சேர்ந்தவர் மீனாம்பிகை 54. சம்பவத்தன்று இவர் வெளியே சென்றிருந்தார்.அப்போது இவர் வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த முப்பத்தி ஐந்தரைபவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுவிட்டார். இந்த திருட்டு பின்னர் மீனாம்பிகைக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தல்லாகுளத்தில் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட எட்டு பேர் கைது
தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் வாலிபர்கள் சிலர் நடு சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் சாலையில் செல்ல பொதுமக்கள் அஞ்சினர். விபத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் நிலையில் அவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆதிகுந்தகண்ணன் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் அங்கு பைக் ரேஸ் ஓட்டிய எட்டு பேரை பிடித்து கைது செய்தார். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்த போது கிருஷ்ணாபுரம் காலனி சரவணன் மகன் தரனேஷ் 20 ,வாடிப்பட்டி தாலுகா ஜெமினிப்பட்டி ரமேஷ் மகன்அபினேஷ்18, வில்லாபுரம் பரமேஸ்வரி அம்மன் தெரு சுரேஷ்பாபு மகன் அச்சுதன் 18 உள்பட எட்டு பேர் என்பது தெரிய வந்தது .அவர்களை கைது செய்தார்.
ஆணையூர் கண்மாயில் குளிக்க சென்றவர் வலிப்பு நோய் வந்து உயிரிழப்பு
மதுரை ஆனையூர் கருப்பசாமி நகரைசேர்ந்தவர் பாலமுருகன் 48. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படும்.இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடினர் .இந்த நிலையில் ஆணையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். இந்த குறித்து தகவல் அறிந்த பாலமுருகன் தந்தை செல்லையா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா, அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு வாலிபர்கள் தற்கொலை
மதுரைபீபிகுளம் மருதுபாண்டியர் முதல் குறுக்குத்தெருவைசேர்ந்தவர் மணி மகன் காளிமுத்து 32.இவருக்கு நிரந்தர வேலை இல்லை.திருமணம் ஆகவில்லை .இதனால் மனக்கவலையில் இருந்துவந்தார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது குறித்து, அவர் அம்மாபாண்டிச்செல்வி தல்லாகுளம் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தெப்பக்குளத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அனுப்பானடி டீச்சர்ஸ்காலனி கணேசநகர் முதல்தெருவை சேர்ந்தவர் தெட்சினாமூர்த்திமகன் கணேசமூர்த்தி23.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.பெண்ஒருவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.இதைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது குறித்து, அவர் தந்தை தெட்சினாமூர்த்தி தெப்பக்குளம் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து வாலிபர் கணேசமூர்த்தியின் தற்கொலைக்கான காரணம்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.