மகளின் காதல் திருமணத்தால் கணவன் மனைவி இடையே மோதல்

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-05-12 09:00 GMT

பைல் படம்

மகளின் காதல் திருமணம் தொடர்பான மோதல்: கணவன் மனைவி உள்பட   மூன்று பேர் கைது 

மதுரை மதிச்சியம் விவேகானந்தர் முதல் தெரு முத்துராமலிங்கம் மகன் உதயகுமார்(47). இவருடைய மனைவி கௌசல்யா(37 ). இவர்களுடைய மகள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் .இதில் கௌசல்யாவும் உறவினர்கள் ஹரி கிருஷ்ணா, மீனா, தீபிகா, லோகேஸ்வரன், அருண்குமார், ஆகிய ஆறு பேரும் உதயகுமாரை தாக்கி உள்ளனர். இது சம்பந்தமாக உதயகுமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து மனைவி கௌசல்யா உறவினர் மீனா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக மனைவி கௌசல்யா கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த மதிச்சியம் போலீசார் கணவர் உதயகுமாரை கைது செய்தனர்.

தத்தனேரியில் கத்தி முனையில் வழிப்பறி:  இரண்டு வாலிபர்கள் கைது.

மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் மூன்றாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாண்டி(42.). இவர் தத்தனேரி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் பாண்டியை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 470ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து பாண்டி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட செல்லூர் நந்தவனம் மாரியப்பன் மகன் சூர்யா பிரகாஷ் 20 ,தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரம் பாண்டி மகன் சுபாஷ் என்ற படையப்பா 24 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பசுமலையில் 13 வயது சிறுமி பலாத்காரம்:வாலிபர் கைது.

மதுரை, பசுமலை ஜோன்ஸ்புரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் முத்தையா மகன் சந்தோஷ்(19.).  இவர் 13 வீட்டில் தனியாக இருந்தபோது 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சந்தோஷை கைது செய்தனர்.

சிறுநீரகக்கோளாறால் பாதிக்கப்பட்ட  இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி( 28 ).இவர் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவர் செந்தில்குமார் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மனைவியுடன் கருத்து வேறுபாடு: கணவர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை,  கோச்சடை கலை சம்பளக்காரர் தெரு மணிகண்டன்(46.) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவி யுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மணமடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி கல்பனா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் மணிகண்டனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம்:போலீஸ் விசாரணை

மதுரை, பி பி சாவடி திருமலை காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் பாபு ( 51). இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் எழுந்திருக்கவில்லை. மனைவி வெண்ணிலா அவரை தட்டி எழுப்பியுள்ளார். அப்போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.இதுகுறித்து அவர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பாபுவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News