மதுரை மாநகராட்சி கழிவு நீர் உந்து நிலையம்: மேயர் திறப்பு
மதுரை மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.;
மதுரை மாநகராட்சி கழிவுநீர் உந்து நிலையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 புதுராம்நாடு ரோடு பகுதியில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளான காமராஜர்புரம், பாலரெங்காபுரம், பழைய குயவர்பாளையம் ரோடு, இந்திரா நகர் சி.எம்.ஆர்.ரோடு, கீழ்மதுரை ஸ்டேசன் ரோடு. என்.எம்.ஆர்.புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் சென்றடைவதில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வந்தது. அதனை சரிசெய்யும் பொருட்டு ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புது ராம்நாடு பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி அருகில், புதிய கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய குழாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தை, மேயர், ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த புதிய கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விரைவாகவும், சீராகவும் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், உதவி செயற் பொறியாளர் மயிலேறிநாதன், மாமன்ற உறுப்பினர்கள் லோகமணி,செந்தாமரைக் கண்ணன், செல்வி, தமிழ்ச்செல்வி, செய்யது அபுதாகீர், பிரேமா, உதவிப்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.