மதுரை மாநகராட்சி பள்ளியில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா
மொத்தம் 425 பேருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.;
மதுரை மாவட்டம்,வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற விழாவில் ,425 மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள்தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பென்னகரம் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், 425 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக, இலவச பேருந்து பயண அட்டை திட்டம்,விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்,விலையில்லா சீருடை, பாடப் புத்தகம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விலையில்லா மிதிவண்டிகள் என்பது வசதி வாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் பிறர் தயவை எதிர்பாராமல் சுயமாகவும், சுதந்திரமாகவும் பள்ளிகளுக்கு வர உதவுகிறது. அந்த வகையில்இ இத்திட்டம் மிகச் சிறப்பான திட்டம். இன்று நடைபெறும் இவ்விழாவில், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 220 மாணவியர் களுக்கும், இளங்கோ மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 205 மாணவர்களுக்கும் என மொத்தம் 425 பேருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதுதான் திராவிடக் கொள்கை. இதனை நிறைவேற்றிடும் விதமாக இந்த அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மாணவியர்கள் எத்தகைய சூழ்நிலையிலும் கல்வியை கைவிடாமல் உயர்கல்வி பயில்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற கல்வி ஒன்றுதான் இன்றியமையாதது. பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில் இந்த அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தொடர்ந்து வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி மேயர் கே.ஜே.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.கார்த்திகா, மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி , மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் , மாநகராட்சி கல்வி அலுவலர் என்.நாகேந்திரன், வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.அய்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.