மதுரை அருகே நடந்த உள்ளாட்சித்தேர்தல் வாக்குப் பதிவை ஆட்சியர் ஆய்வு

செக்காணூரணியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் பார்வையிட்டார்;

Update: 2021-10-09 10:42 GMT

மதுரை மாவட்டம்,  செக்காணூரணி வாக்குப்பதிவு மையத்தை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்.

செக்கானூரனி வாக்குப்பதிவு மையம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை மாவட்டம், செக்கானூரனியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் பார்வையிட்டார். மதுரை மாவட்டம் ,செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்கு பதிவு மையத்தில் 7 மணி முதல் வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். அங்கு,  மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர்  பார்வையிட்டார். அதன் பின், திருமங்கலம் 18-ம் வார்டு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு, வாக்குப்பதிவு நடைபெறும். திருமங்கலம் வாக்குப் பதிவு மையத்தினையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வாக்குப்பதிவு மைய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News