வெளிநாட்டு நிறுவனத்துடன் மதுரை கிளினிக்கல் லேபரட்டரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

டயக்னாக்ஸ்டிக்ஸ் மற்றும் மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட்டரி வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளனர்

Update: 2022-05-12 10:45 GMT

டயக்னாக்ஸ்டிக்ஸ் மற்றும் மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட்டரி இணைந்து ' நியுபெர்க் போஸ் லேபரட்டரிகிபிரைவேட் லிமிடெட் ' என்ற புதிய நிறுவனமாக இணைந்து செயல்பட ஒப்பந்தம்:

 டயக்னாக்ஸ்டிக்ஸ் மற்றும் மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட்டரி இணைந்து  நியுபெர்க் போஸ் லேபரட்டரிகிபிரைவேட் லிமிடெட்  என்ற புதிய நிறுவனமாக இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது:

இந்தியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டபல்வேறு வெளிநாடுகளில் செயல்பட்டுவரும்நியுபெர்க் டயக்னாக்ஸ்டிக்ஸ் நிறுவனம், மதுரை போஸ் கிளினிக்கல் லேபரட்டரியுடன் இணைந்து ' நியுபெர்க் போஸ் லேபரட்டரிபிரைவேட் லிமிடெட் ' என்ற புதிய நிறுவனமாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

இதற்கான கூட்டு ஒப்பந்தம் மதுரை தனியார் நட்சத்திர ஓட்டலில் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு, நிறுவனர் மற்றும் தலைவர் நியுபெர்க், மற்றும் டாக்டர் புரட்சிமணி மற்றும் டாக்டர் பி.அறிவரசன் , போஸ் கிளினிக்கல் லேபரட்டரி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. ஏ.கணேசன், துணைத் தலைவர், டாக்டர் சரண்யா நாராயண், தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் மைக்ரோபயாலஜிஸ்ட்,நியுபெர்க் குழுமம் தலைமை செயல் அதிகாரி ஐஸ்வர்யா வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஒப்பந்தம் மூலம், மதுரை மற்றும் அதன் சுற்று பகுதிகள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆய்வகங்கள் மற்றும் 100 மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News