மதுரை சௌபாக்ய விநாயகர் கோயிலில் வராஹியம்மன் சிறப்பு பூஜை
வராகி அம்மனுக்கு பக்தர்களால், பால், தயிர், இளநீர், மஞ்சள் பொடி ஆகிய அபிஷேகம் செய்யப்படும்.;
மதுரை அண்ணா நகர், மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் இம்மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை பஞ்சமியை முன்னிட்டு, காலை 9 மணி அளவில், வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
இந்த கோவிலில், மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும், அதைத் தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம், சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இது மட்டுமின்றி கோவிலில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ராகு வேலையில் துர்க்கை மற்றும் வராகி அம்மனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறுகிறது.
பஞ்சமி அன்று இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடத்தப்பட்டு, வராகி அம்மனுக்கு பக்தர்களால், பால், தயிர், இளநீர், மஞ்சள் பொடி ஆகிய அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி மஞ்சள் மாலை மற்றும் பூமாலைகள் அணிவித்து, சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை வழிபடுவர். வராகி அம்மனை வழிபட்டால் சகல துன்பங்களும் போய், நல்ல வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும். இதற்கான ஏற்பாடுகளை சௌபாக்கி விநாயகர் ஆலய நிர்வாக குழு, மற்றும் மகளிர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இம்மாதம் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள யோக நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு காலை 9 மணி அளவில்,பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து , அர்ச்சனை வழிபாடு நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.