மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு

திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி முழுவதும் நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும் என்ற வாசங்களுடன் ஓட்டப்பட்டது;

Update: 2023-05-11 11:30 GMT

மதுரை திருமங்கலம் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால்  ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும் என்ற வாசகங்களுடன்  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா, வி.கே சசிகலா, தினகரன் படத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தனக்காக தனி ஆதரவாளர்களை திரட்டி திருச்சியில் மிகப்பெரிய மாநாட்டினை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து, சசிகலா, டிடிவி .தினகரனையும் சந்திப்பதாக கூறி வந்தார்.இந்த நிலையில், கடந்த எட்டாம் தேதி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜமோகன் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி முழுவதும், நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும் என்ற வாசங்களுடன் ஓபிஎஸ், ஜெயலலிதா, வி.கே சசிகலா, தினகரன் படத்துடன் கூடிய போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ளனர்.

மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சசிகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் அடித்த போஸ்டரில், நாம் ஒன்றாக வேண்டும் கழகம் நன்றாக வேண்டும் என்ற வாக்கியத்துடன் சசிகலா, தினகரன், ஓபிஎஸ், ஜெயலலிதா படத்துடன்  போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு டிடிவி.தினகரனை சந்தித்த நிலையில் அவரது படம் இடம் பெற்றுள்ளது. ஆனால், இன்னும் சசிகலாவை  சந்திக்கும் முன்னரே அவரது படம் இடம் பெற்றுள்ளது. அதிமுகவினரிடையே  பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News