மதுரை விமான நிலையத்தில் குடியரசு தின விழா

Madurai Airport Republic Day Celebration மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன் விசுவநாதன் தேசிய கொடி ஏற்றினார் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.;

Update: 2024-01-26 10:26 GMT

மதுரை விமானநிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

Madurai Airport Republic Day Celebration

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி  ௨௬ ந்தேதி  குடியரசு தின விழாவானது கொண்டாடப்படுகிறது. டில்லியில் ஜனாதிபதியும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவது வழக்கமாக  உள்ளது.அந்த வகையில்  இன்று சென்னையில் நடந்த  விழாவில் ஆளுநர்  ரவி கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதேபோல்  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் கொடியேற்றி விருதுகளை வழங்கினர். 

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடெங்கும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தேசியக் கொடி ஏற்றினார்.

வீரர்கள் அணிவகுப்பு மரியாதைக்கு பின் மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து உரையாற்றினார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தமது கடமையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து செயல்பட்டு வருகிறோம் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறோம்.

அது நமது சீருடைக்கும் கௌரவம் ஆக உள்ளது என்பதில், பெருமிதம் கொள்வோம் என கூறினார்.

Tags:    

Similar News