வரும் 16 இல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுக் கூட்டம் : எம்.பி. தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுக் கூட்டம், வரும் 16- இல் நடைபெறுகிறது.;

Update: 2021-07-06 17:36 GMT

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுக் கூட்டம் வருகின்ற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக விருதுநகர் எம்.பிமாணிக் தாகூர் தகவல் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி -மாணிக்கம் தாகூர் மேலும் கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சுகாதார துறை அமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்தின் வாயிலாக வரும் 16ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், ஜிம்பர் மருத்துவமனை இயக்குநரும் எய்மஸ் மருத்துவமனை தலைவருமான கட்டோச்சி தலைமையில், மத்திய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இணைச் செயலாளர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் மருத்துவ வல்லுனர்கள் விருதுநகர், மதுரை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவினர் தலைமையில் பங்கேற்க உள்ளனர்.

இதில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டங்கள் புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்குவது, ஜப்பான் நிறுவனமான ஜமைக்கா முதலீடுகள் குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்ய உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தமிழக அரசு நிலம் ஒதுக்கியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலங்களை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

அதேபோல் , நிதி ஆதாரங்கள் மத்திய அரசு நேரடியாக பட்ஜெட் மூலம் ஒதுக்காமல் பாராளுமன்ற விதிகளின்படி தன்னாட்சி அமைப்பின் மூலம் கடன் பெற்று செயல்பட உள்ளது.இதனால் ,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கான நிதி நிலை ஆதாரங்கள் பாராளுமன்ற குழுவிடம் வராது. தனிப்பட்ட முறையில் ஜப்பான் நிறுவனம் மூலம் நிதி ஆதாரங்கள் பெறப்படுவதால், அது குறித்து நிர்வாக குழு கூட்டம் முடிந்த பின்புதான் தகவல் தெரிவிக்க முடியும்.

மேலும், நடப்பு ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கினால் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப பூர்வாங்க பணிகள் துவங்குவதில் அக்கறை செலுத்த முடியும். மாணவர்கள் சேர்க்கையுடன் மாணவர்கள் தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

Tags:    

Similar News