ஓரிரு மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாணவர் சேர்க்கை - மாணிக்க தாகூர் எம்.பி.,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும் என மாணிக்க தாகூர் எம்.பி., தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆலோசனை கூட்டம் எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் கட்டோச்சி தலைமையில் மதுரையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்க தாகூர் எம்.பி., இந்த ஆலோசனைக் குழுவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் , தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் , மக்களவை உறுப்பினர் சத்தியநாராயணன் உள்ளிட்ட 17 பேர் உள்ளனர். மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். எய்ட்ஸ் குறித்த ஆலோசனை கூட்டம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து 1977 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் தயாராகி உள்ளன. இதில், ஜெய்க்கு நிறுவனம் ஆயிரத்து 627 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள, 300 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அதற்கான பணிகளை துவங்கும் சூழ்நிலையில் உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. அதில், போதிய இட வசதிகள் கிடைக்காத பட்சத்தில் சிவகங்கை மாவட்டம் தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ பணிக்கான கட்டிட வடிவமைப்பு மற்றும் திட்டங்களை ஜப்பானின் ஜெயிக்கு நிறுவனம் செய்து தரும் எனவும், கட்டிட பணிகளை மத்திய அரசின் தொழில் நிறுவனம் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2023ம் ஆண்டு துவங்கப்பட்டு 2026ம் ஆண்டு முடிக்கப்படும்.
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மருத்துவமனை மட்டுமல்லாமல், மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி கூடங்களாக செயல்படுவதால் தரம் உயர்ந்த மருத்துவமனையாக செயல்பட உள்ளதால்,அதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் தரம் பரிசீலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை நடைபெறும் கட்டத்தில் நீட்தேர்வு முடித்ததற்குப்பின் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ,தமிழக முதல்வரும் முழுமூச்சுடன் தீவிரமாக செயல்படுகிறார். ஆகையால், விரைவில் செயல் திட்டங்கள் துவங்கி செயல்பட உள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறார். அதற்காக ஒரு மாத அவகாசம் கோரப்பட்டுள்ளது. வரும் நவம்பர் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை காண மாணவர் சேர்க்கை நடைபெறும். எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்றுநர்கள் 180 பேர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் 130 பேர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
பணியிடங்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு, தேர்வு செய்ய எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிர்வாக வசதிக்காக எய்ம்ஸ் மருத்துவமனை நான்கு குழுக்களை அமைத்துள்ளது. நிர்வாகக்குழு, நிதிக்குழு, கண்காணிப்பு குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழு என நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேனி அல்லது சிவகங்கை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுப்பது, இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கும். 2026ம் ஆண்டு நிறைவு பெறும் 2026ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட சிறந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பானிய டிசைனர் டிசைன் செய்து கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கான கால அவகாசம் மிகப் பெரிய ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை யாக செயல்படுவதால், தரம் உறுதி செய்யப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாவது குறித்த கேள்விக்கு, மதுரை விமான நிலையத்திற்கு கன விரிவாக்கப் பணிகளுக்காக நில ஒப்படைப்பு பணி தாமதமாகிறது. கடந்த 10 ஆண்டில் முந்தைய ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், இந்த கால தாமதம் ஏற்பட்டது.
தற்போது, வருவாய்த்துறை அமைச்சர் விரைவாக இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். 267 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு பணிக்காக தயார் செய்யப்பட்டு இழப்பீடு தொகையாக 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நில ஒப்படைப்பு பணி முடிவடைந்ததும், சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி தொடங்கும் என மாணிக்க தாகூர் எம்.பி., தெரிவித்தார்.