Maduari District Crime News மதுரை அருகே, வீட்டின் கதவை உடைத்து, ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை: க்ரைம் செய்திகள்

Maduari District Crime News மதுரை மாவட்டத்தில் நடந்த முக்கிய க்ரைம்செய்திகள் பற்றி பார்ப்போம்.;

Update: 2023-11-22 10:55 GMT

Maduari District Crime News

திருப்பரங்குன்றத்தில்,வீட்டை உடைத்து ரூ ஒரு லட்சம் கொள்ளை:மர்ம ஆசாமி கைவரிசை:

திருப்பரங்குன்றத்தில், வீட்டை உடைத்து ரூபாய் ஒருலட்சம் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணிநகர் சாம்பசிவம் நகரைச்சேர்ந்தவர் முத்துக்கண்ணன் மனைவி விஜயா 45.உடல் நிலை சரியில்லாத இவர், மகளை ஆஸ்பத்திரியில் காண்பித்துவிட்டு, மகள் வீட்டிலேயே தங்கிவிட்டார்.பின்னர் அடுத்தநாள் அவர் வீட்டிற்குச்சென்றார்.அப்போது, அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் பெட்ரூமில் கப்போர்டில் அவர் வைத்திருந்த ரூ ஒருலட்சமும் கொள்ளையடிக்ப்பட்டிருந்தது.இந்த சம்பவம் குறித்து ,விஜயா திருநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து, அவர் வீடுபுகுந்து கொள்ளையடித்துச்சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி தொழிலதிபர் மதுரை அருகேஇறப்பு; போலீஸ் விசாரணை.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையால், தூத்துக்குடி தொழிலதிபர் மதுரை அருகே இறந்துகிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மேற்கு அண்ணாநகர் முதல்தெருவைச்சேர்ந்தவர் தொழிலதிபர் திரவியராஜ்.இவர், பாளையங்கோட்டை மெயின்ரோடு மூன்றாவது மைல் என்னுமிடத்தில் பெயிண்ட்வியாபாரம் செய்துவருகிறார்.வியாபாரத்தில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதனால், வாங்கிய கடனையும் திருப்பிச்செலுத்தமுடியவில்லை.எனவே ,மன அழுத்தத்தில் இருந்துவந்தார்.

இந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேசென்றவர் வீடு திரும்பவில்லை.அவரை பல இடங்களிலும் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர்.இந்த நிலையில், பெருங்குடி மண்டேலநகர் ரோட்டில் அவர் இறந்து கிடப்பதாக அவர் மனைவி பெரியநாயகிக்கு தகவல் கிடைத்தது.அவர் சம்பவ இடத்நிற்கு சென்று பார்த்துவிட்டு இது குறித்து அவனியாபுரம் போலீசில் புகார்செய்தார்.

போலிசார் வழக்குப்பதிவுசெய்து, இறந்து கிடந்த திரவியத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இது குறித்து, வழக்குப்பதிவுசெய்து, தொழிலதிபர் திரவியராஜின் சாவுக்கான காரணம் என்ன என்பதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மெக்கானிக் திடீர்சாவு: போலீஸ் விசாரணை.

மதுரைஅரசுபோக்குவரத்து கழகபணிமனையில், பணியில் இருந்த மெக்கானிக் திடீரென்று மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.பட்டிவீரன்பட்டி காந்திபுரம் முத்துமாரியம்மன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் முருகானந்தம் 40.இவர் பைபாஸ்ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலைபார்த்துவந்தார்.இவர் பணிசெய்து கொண்டிருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார்.

அவருடன் வேலை பார்த்த சக ஊழிமர்கள் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், பாதிவழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவர் மனைவி மகாலெட்சுமி எஸ.எஸ்.காலனி போலீசில் புகார்செய்தார்.போலீசார், வழக்குப்பதிவுசெய்து, மெக்கானிக் முருகானந்தத்தின் சாவுக்கான காரணம்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வேலை வாங்கித் தருவதாக ரூ 9லட்சம் மோசடி:3பேர் மீது வழக்கு விசாரணை 

தமிழக அரசில் ஏ.பி.ஆர்.ஓ.வேலைவாங்கித்தருவதாக ரூ9லட்சம் மோசடிசெய்து மிரட்டல்விடுத்த பெண் உட்பட மூன்றுபேர்மீது வழக்குப்பதிவுசெய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.எஸ்.எஸ்.காலனி ஜானகிநாராயணன்தெருவைச்சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 57.இவர் மகனுக்கு அரசு வேலை வாங்க முயற்சித்துக்

கொண்டிருந்தார்.இந்த நிலையில், திருநகரைச்சசேர்ந்த தென்னவன் என்பவர் அறிமுகமானார்.அவர் தமிழக அரசில் ஏ.பி.ஆர்.ஓ.வேலைவாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளார்.இதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டுமுதல் பல்வேறு தவனையாக ரூ 13 லட்சத்தை தென்னவனிடமும் அவர் உதவியாளர் கவிதாவிடமும் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாறிறியுள்ளனர்.இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவில்புகாரி அளித்துள்ளனர்.இதனால், நான்கு லச்சத்தை திருப்பிச்செலுத்திவிட்டனர்.

பாக்கித்தொகை ஒன்பது லச்சத்தை திருநகர் சேகர் என்ற நிலாசேகர் பொறுப்பேற்றுள்ளார்.ஆனால் அவரும் அந்தத்தொகையை தரமறுத்துவிட்டார்.சுந்தரமூர்த்தியை மிரட்டியுள்ளார்.இது குறித்து, சுந்தரமூர்த்தூ போலீஸ் டி.ஜி.பி.

அலுவலகத்தில் புகார்செய்தார்.

இதைத்தொடர்ந்து ,மதுரை போலீஸ்கமிஷனர் உத்தரவில் எஸ.எஸ்.காலனி போலீசார் தென்னவன்,உதவியாளர் கவிதா,சேகர் என்ற நிலா சேகர் மூன்றுபேர்மீது வழக்குப்பதிவுசெய்து இந்த மோசடிகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

லாட்டரி விற்பனை ஒருவர் கைது.

மதுரைகரிமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன்.இவர், போலீசாருடன் ரோந்துப்பணிசென்றார்.

அவர்கள் பொன்னகரம்பிராட்வே அருகே, சென்றனர்.அப்போது ,அங்கு தடைசெய்யப்பட்ட லாட்டரிவிற்பணை செய்த பொன்னகரம் பிராட்வேயைச்சேர்ந்த பெரியகருப்பன் மகன் சுந்தரமகாலிங்கம்(37).என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரிநம்பர்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News