பாஜக தலைவர் அண்ணாமலை பஞ்சாயத்து தேர்தலில் நிற்கட்டும்: மாணிக்கம் தாகூர் எம்.பி
அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை , அங்குள்ள மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் என்பதை மறந்து விடக்கூடாது.;
பாஜக தலைவர் அண்ணாமலை, பஞ்சாயத்து தேர்தலில் நிற்கட்டும் என்றார் காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் எம்.பி.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்திரனராக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்று, இப்பள்ளியில் கடந்த மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கு செயற்கைக் கோள் மென்பொருள் தயாரிக்க உறுதுணையாக செயல்பட்ட 10 மாணவிகளை பாராட்டி, சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் , அதன் பின்பு பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லட்டும் , அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை , அங்குள்ள மக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்டவர் என்பதை அவர் மறந்து விடக்கூடாது. பாஜக தலைவர் அண்ணாமலை முதலில், பஞ்சாயத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவர் ஆன பிறகு, தான் தலைவர் என்று சொல்லட்டும். ஆனால், சினிமாவில் வடிவேலு , நான் ரவுடி நான் ரவுடி என்பது போல், நான் தலைவன் நான் தலைவன் என்று தற்போது அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மேலும், திருமங்கலம்-விமான நிலையச்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தற்போதுள்ள திமுக அரசு அதற்கான பணிகளை செய்வதற்கு மும்முரம் காட்டி வருகிறது எனவும் , கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், தற்போது எம்எல்ஏ -வாகவும் உள்ள ஆர் பி உதயகுமார், மூன்று முறை பூமி பூஜை நடத்தியும், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன். திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்வது கொடுத்து சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிதி கட்கரியிடம் பேசி இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஏப்ரல் மாதம் ஆகும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளதால், அப்போது அதற்கான தீர்வு கிடைக்கும் என்றார் விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர்.