மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கிருஷ்ண ஜயந்தி விழா

முல்லையாற்று கால்வாய் கரையில் கோபாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா 3 நாட்கள் நடந்தது;

Update: 2023-09-09 09:00 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற, கிருஷ்ண ஜெயந்தி சுவாமி வீதி உலா.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடி நாயக்கன்பட்டியில், முல்லையாற்று கால்வாய் கரையில் கோபாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா 3 நாட்கள் நடந்தது.

கடந்த மாதம் 29ந்தேதி; செவ்வாய்கிழமை காலை 7மணிக்கு காப்புகட்டப்பட்டது. முதல்நாள் மாலை 6மணிக்கு விநாயகர் கோவிலிருந்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டு கிருஷ்ணகோவி லுக்கு வந்தது. இரண்டாம் நாள் காலை 6மணிக்கு கோபாலகிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் நடந்தது பின் 12வகையான சிறப்பு அபிஷேக,ஆராதனை,அர்சனைகள் செய்து 9மணிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. 11மணிக்கு பேரூராட்சி கவுன்சிலர்கள் அசோக்குமார், சூரியா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.மாலை 7மணிக்கு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாள் காலை 7மணிக்கு கோபாலகிருஷ்ணனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இரவு 7மணிக்கு கருடாழ்வார்மீது அமர்ந்தநிலையில் கோபாலகிருஷ்ணன் கோவிலிருந்து புறப்பட்டு நாட்டாண்மைகக்காரர்தெரு, வல்லபகணபதி கோவில், பழையதாலுகா ஆபிஸ், குலசேகரன்கோட்டைபிரிவு, இராமநாயக்கன்பட்டி, சந்தைபாலம், பஸ்நிலையம், ஜெமினிபூங்கா, தாதம்பட்டி இரண்டை விநாயகர்கோவில், யூனியன் ஆபிஸ் பிரிவு, காவல் நிலையம், போஸ்ட் ஆபிஸ் வழியாக சந்தைகேட், போடிநாயக்கன்பட்டி பிரிவு வழியாக  கோவிலை அடைந்தது. நான்காம்நாள் காலை 9மணிக்கு முளைப்பாரி கரைககப்பட்டது. இதன் ஏற்பாடுகளை, கோபாலகிருஷ்ண கோவில் திருப்பணிக்கு ழுவினர் செய்திருந்தனர்.

தசாவதாரம் நாட்டிய நாடகம்  பரத நாட்டியம், கலைநிகழ்ச்சி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் 200வருடங்கள் பழமையான நவநீதபெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்திவிழா 2 நாட்கள் நடந்தது. முதல்நாள் காலை 9மணிமுதல்12மணிவரை சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5மணிக்கு ராதா கிருஷ்ணா அலங்காரத்தில் சிறுவர்,சிறுமியர்களுடன் பஜன்ஊர்வலம் நடந்தது. 6மணிக்கு கண்ணன் சிலம்பம் பள்ளி மாணவ-மாணவிகளின் சிலம்பாட்டம் நடந்தது. கலந்துகொண்டவர்களுக்கு, சுந்தரஜெயமணி பரிசுகள் வழங்கினார்.

8மணிக்கு ராமசந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பாக, முத்துமாலாகோபிகுமார் குழுவினரின் தசாவதாரம் நாட்டியநாடகம் நடந்தது. இரவு 9மணிக்கு அண்ணாமலையார் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கோபிநாத் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாம்நாள் காலை 8மணிக்கு ஆச்சாரியார்அழைப்பு, கோபூஜை, அஸ்வபூஜைகள் நடந்தது. 9.15மணிமுதல் 12.30மணிவரை அஷ்டாட்சரமந்திரஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண மூல மந்திரயாகமும் நடந்தது. மாலை 4மணிமுதல் 6மணிவரை கிருஷணன் தொட்டில்வைபவம் தாலாட்டுசேவையும் நடந்தது.

6மணிக்கு கணேசா ஸ்போட்ஸ் அகடமிசார்பாக மாணவ-மாணவிகளின் கராத்தேநிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு நட்டுவாங்ககலைமணி சாந்தி சார்பாக கிருஷ்ணன் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்துகொண்டவர்களுக்கு செந்தில் பவானி பரிசுகள் வழங்கினார். 8மணிக்கு டாக்டர் ராஜேஷ்வரி கோபிநாத் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதன் ஏற்பாடுகளை, நீரேத்தான் கிராம பொதுமக்கள், பாகவதோத்தமார்கள், பரம்பரை அறங்காவலர் நவநீதகண்ணன் தலைமையில் நிர்வாகிகள்மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News