சோழவந்தான் மாரியம்மன் ஆலயத்தில், நவராத்திரி விழா..!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி தொடங்கியது. அதையொட்டி கோயிலில் கொலு வைக்கப்பட்டது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி தொடங்கியது. அதையொட்டி கோயிலில் கொலு வைக்கப்பட்டது.
சோழவந்தான்:
மதுரை,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆரம்பம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொலு பொம்மைகளை பார்த்துச் சென்றனர்.
முதல் நாளான நேற்று ஜெனகை மாரியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதுரை மாவட்டம் ,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, நேற்று கோயில் மண்டபத்தில் கொழு பொம்மைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வருகை தந்து கொழு பொம்மைகளை பார்த்துச் சென்றனர்.
நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கொளு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு ஒன்பதாவது நாளில் சாமி ஜெனகை மாரியம்மன் திருவிதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதேபோல், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயில் மற்றும் அருகில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா ஆரம்பமானது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொலு பொம்மைகளை, பார்த்துச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.