மதுரையில் வியாபாரி வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு: போலீஸார் விசாரணை
வெளியூர் சென்ற நிலையில் வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளது;
மதுரையில் செல்போன் வியாபாரி வீட்டில் 45 சவரன் நகை திருடுபோனது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரையில் செல்போன் கடை நடத்தி வரும் விமலநாதன் என்பவர் வீட்டில் இருந்த 45 சவரன் நகைகள் திருடு போனது. விமலநாதன் வீட்டைப்பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரை நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.