மதுரையில் அனைத்துத் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திமுக வின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

Update: 2022-09-22 08:45 GMT

பைல் படம்

திமுக அரசைக் கண்டித்து அனைத்துத்துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக் குழு மாநில மையத்தின் சார்பில், தி.மு.க-வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் பல்வேறு நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம், மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஜெய ராஜேஸ்வரன் மனோகரன், நடராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News