மதுரையில் வைகை கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரையில் வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.;

Update: 2023-12-18 10:05 GMT

வைகை கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த நான்கு மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வைகை அணையும் நிரம்பி வருவதால் வைகை அணையில் இருந்து இருந்து வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  இதன் காரணமாக பாதுகாப்பு கருதி வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் விடுக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சியின் சார்பாக ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ள முள்ளி பள்ளம் ஊராட்சியில், ஊராட்சி சார்பாக வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது .

அதில் வைகை அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், ஆற்றில் குளிக்கவும் மற்ற காரணங்களுக்காக இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை ஆற்றின் கரையோரங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதிகளில் வைகை நதியில் நீர் அதிகளவில் பெருக்கெடுத்து செல்வதால், போலீஸார் தரைப்பாலம் பகுதியில் நடந்து செல்ல வேண்டாம் எனவும், ஆற்றுக்குள் குளிக்க இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News