பங்குச் சந்தையில் நஷ்டம்: மதுரையில் கணவர் மனைவி தற்கொலை
மதுரையில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கணவர் மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.;
மதுரை தெப்பக்குளத்தை அடுத்த பழைய குயவர்பாளையம் சேர்ந்தவர் நாகராஜன் (46) மற்றும் அவருடைய மனைவி லாவண்யா (34) . இருவர் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தெப்பக்குளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பங்கு சந்தை முதலீடு செய்த வகையில் நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிகிறது. தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.