திருமங்கலம் அருகே கணவனை தாக்கி மனைவியின் தாலிச்சங்கிலி பறிப்பு

திருமங்கலம் அருகே பேரையூரில் வீடு புகுந்து கணவரை தாக்கி மனைவியின் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்;

Update: 2021-12-06 05:30 GMT

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே சனிக்கிழமை இரவு வீடு புகுந்து, பெண்ணின் தாலிச் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் கணவரை தாக்கிவிட்டு  தப்பி ஓடிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரையூர் அருகே உள்ள கே. மீனாட்சிபுரத்தில் சேர்ந்தவர் சுந்தரம்( 58 ).இவரது மனைவி ராமுத்தாய் இரவு  வீட்டுக்குள் தூங்கியுள்ளார் . கணவர் சுந்தரம் வெளியே தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் சுந்தரத்தை பிடித்து வைத்த பின்னர், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ராமுத்தாய் அணிந்திருந்த  தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அப்பொழுது கணவர் சுந்தரம் மர்ம நபர்களை  விரட்டி பிடிக்க முயன்றபோது, அவரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளார் .இச்சம்பவம் குறித்து உடனடியாக பேரையூர் போலீசாரிடம் சுந்தரம் புகார் செய்தார் . புகாரின் அடிப்படையில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News