மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மதுரை மாநகராட்சி மேலூர் மற்றும் திருமங்கலம் நகராட்சிகளில் தனித்து போட்டியிடுகிறது. மதுரை மாநகராட்சியின் 6 பெண்கள் உட்பட 15 பேர் போட்டியிட உள்ளனர். என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் முகமது கவுஸ் தெரிவித்தார். உடன் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சீனி அகமது, தமுமுக செயலாளர் இப்னு, மனிதநேய மக்கள் கட்சி அப்பாஸ் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.