மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை மாவட்டத்தில் பலத்த மழை:
மதுரை:
மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.
அதை போக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக மதுரை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், விளாச்சேரி, அவனியாபுரம், புதூர் ,அண்ணா நகர், கருப்பாயூரணி, செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, சமயநல்லூர், பரவை, அழகர் கோவில், மேலூர் உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால், மாலை நேரங்களில் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசியது . கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பநிலை தணிக்கும் வகையில், இந்த மழையானது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.
மேலும், மதுரை நகரில் பலத்த மடையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றன. மதுரை அண்ணா நகர் மருதுபாண்டியர் தெரு, ஜூப்பிலி டவுன், கோமதிபுரம் உள்ளிட்ட பல தெருக்களில் மழைநீர்கள் குளம் போல தேங்கின. இதனால், இரண்டு சக்கர வாகன செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர்.
இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.