மதுரையில் பண்டிகை கால கைத்தறி கண்காட்சி விற்பனை தொடக்கம்

இக்கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறுகிறது

Update: 2021-12-17 15:15 GMT

கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  மதுரையில் தொடங்கிய  சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி 

மதுரையில், கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர  இன்று  தொடக்கி வைத்தார்.

கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுஜவுளி இரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேம்படுத்தி தொடர் வேலைவாய்ப்பின் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பொங்கல்-2022 பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறி துறையின் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை எல்.என்.எஸ். இல்லம், 24 ஜடாமுனி கோவில் தெரு, மதுரையில் 17.12.2021 முதல் 30.12.2021 முடிய நடத்தப்படவுள்ளது.

இக்கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை திருப்பூர் மற்றும் இராசிபுரம் மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில், பட்டு இரகங்களுக்கு 10 முதல் 65 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கல் 2021 கைத்தறி சிறப்பு பட்டு கண்காட்சியில் ரூ.144.05 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு விற்பனை குறியீடு ரூ.200.00 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு வாங்கி பயனடையலாம் என  ஆட்சித்தலைவர்.அனீஷ் சேகர தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News