பணியின்போது இறந்த காவல் ஆய்வாளருக்கு அரசு மரியாதை

அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்;

Update: 2023-04-12 07:00 GMT

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளர் திருமங்கலம் மேலஉரப்பனூரில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சியில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த உளவுத்துறை காவல் ஆய்வாளரின் இறுதிச்சடங்கு திருமங்கலம் மேலஉரப்பனூரில்  நடைபெற்றபோது காவலர்கள் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குண்டுமணி. இவரது மகன் சிவா.இவர், திருச்சியில் உளவுத்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், நேற்று திடீரென பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் சிவா உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலஉரப்பனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு, அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள், கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து, திருமங்கலம் காவல் துணைக்கண்காணிப்பாளர் வசந்தகுமார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பணியின் போது உயிரிழந்த மதுரையை சேர்ந்த, காவல் ஆய்வாளர் சிவாவிற்கு அவர்களது ஊர் வழக்கப்படி  மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனி தலைமையிலான போலீசார் காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது மகன்கள் அவருக்கு இறுதிக் கடமையை நிறைவேற்றினர்.

Tags:    

Similar News