வாடிப்பட்டியில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள்
வாடிப்பட்டியில், அரசு அதிகாரிகள் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றனர்;
தேசிய வாக்காளர் தின உறுதி மொழி:
வாடிப்பட்டி, ஜன.26.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி தாதம்பட்டி-நீரேத் தான் மந்தை திடலில் எடுக் கப்பட்ட து.
இந்த நிகழ்சிக்கு, தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், பேருராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் வாக்காளர் உறுதி மொழி வாசித்தார். அப்போ து அவர் அதில் கூறியதாவது: -மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலம் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் ,மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப் போம் என்று உறுதி மொழி கூறுகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந் தன், பூமிநாதன், மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொண் டனர். முடிவில் ,இளநிலை உதவியாளர் முத்துபாண்டி நன்றி கூறினார்.