மதுரையில் குவிந்த குப்பைகளை ஜே. சி. பி. மூலம் அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்

மதுரையில் குவிந்த குப்பைகளை ஜே. சி. பி. மூலம் அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.;

Update: 2023-11-13 07:33 GMT

மதுரையில் குவிந்த குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்தினர்.

மதுரையில் மலையளவு குவிந்திருக்கும் குப்பைகளை ஜே.சி.பி .இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று நள்ளிரவு வரையில் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான சாலையோரக்கடைகள் மூலமாக ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.


குறிப்பாக, புத்தாடைகள், பாய், தலையணைகள், கைலிகள், குறைந்த விலை துணி ரகங்கள்,  காலணிகள், பேன்சி ரகங்களான கவரிங் வளையல் , கம்மல், நெக்லஸ், செயின் ,பேக்குகள், போர்வை, மிதியடிகள் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

அதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர். குறிப்பாக, அவைகளில் பாலிதீன் கவர்கள் அதிக அளவில் பயப்படுத்தப்பட்டது.இதன் காரணமாக  இன்று விளக்குத்தூண்  மற்றும் மாசி வீதிகளில் சாலையோரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் மலை மலையாக டன் கணக்கில் குப்பைகள் மற்றும் பாலித்தின் கவர்கள் குவிந்து காணப்பட்டன. அவை போக்குவரத்திற்கு  பெரும் இடையூறான இருந்தன. இதுபற்றி  பொதுமக்கள் பலரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தனர்.

அதனை தொடர்ந்து  மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டும், மனித உழைப்பின் மூலமும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags:    

Similar News