சோழவந்தான் அருகே சாலையோரமாக குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

சோழவந்தான் அருகே சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் விவசாய நிலங்களும் குப்பையாவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2024-06-13 11:17 GMT

சாலையோரம் வரிசையாக கொட்டப்பட்டுள்ள குப்பைகள் 

சோழவந்தான் அருகே சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி பகுதியில் சாலை ஓரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகிய பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயமும் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .

இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், குப்பைகளை கொட்டுவதற்கு கருப்பட்டி ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு ஏற்பாட்டையும் செய்யாத நிலையில் பொதுமக்கள் குப்பைகளை கொண்டு வந்து சாலை ஓரங்களிலும் விவசாய நிலங்களிலும் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பைகளில் தெருநாய்கள் குப்பையைக்கிளறி சாலை முழுவதும் இழுத்து தள்ளுகின்றன.இதனால்  தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

இது குறித்து, சமூக ஆர்வலர் லட்சர்கான் கூறும்போது:

கருப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும்,எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால், பொம்மம்பட்டி கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் , மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடத்தை ஏற்பாடு செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென, கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

Similar News