திருமங்கலம் அருகே மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்
வென்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன .;
பேச்சு போட்டியில் வென்ற பள்ளி மாணவ மாணவியருக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பரிசு வழங்கினார்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள குன்னத்தூர் அம்மா யோக மணி மண்டபத்தில், பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் ,வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பரிசு வழங்கினார்.
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் பாரதி யுவகேந்திரா சார்பில் தன்னிகரில்லா தலைமை பண்பு என்ற தலைப்பில் தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைப்புகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 10 மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவ மாணவிகள் என மூன்று பிரிவுகளாக பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது .
இதில், நடுநிலைப்பள்ளி பிரிவில் ரோகித் குமார் முதலிடத்தையும், ராஜஸ்ரீ இரண்டாம் பரிசையும், சிவபிரகாஷ் மூன்றாம் பரிசையும் பெற்றனர். உயர்நிலைப்பள்ளி பிரிவில் , சுஸ்மிதா முதல் பரிசையும், கலையரசி இரண்டாம் பரிசையும், சூரிய வர்ஷினி மூன்றாம் பரிசையும் பெற்றனர். மேல்நிலைப்பள்ளி பிரிவில், குட்டி கிருஷ்ணன் முதல் இடத்தையும், மதுமிதா, 2-ஆம் இடத்தையும் சுப நீதி சுப்பிரமணி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக ரூபாய் 2 ஆயிரம் இரண்டாம் பரிசாக ரூபாய் 1000 மூன்றாம் பரிசாக ரூபாய் 500 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன .
நிகழ்ச்சிக்கு, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். பாரதி மகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார் . தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அ.இ. அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 50 பேருக்கு மனிதநேய மாண்பாளர் என்ற விருது வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை , அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் செய்திருந்தனர்.