திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

திருமங்கலம் நகர் மன்ற உறுப்பினர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் அனல் பறக்கு பிரச்சாரம்.

Update: 2022-02-14 02:20 GMT

திருமங்கலம் நகர்மன்ற பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் ஆர்.பி.உதயகுமார் கற்பகநகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி வார்டு நகர்மன்ற பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கற்பகநகர் பகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருமங்கலம் நகராட்சி 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் R.சஞ்சய், m,pharm , 22வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் S.அலமேலு, 27வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் R.பாலகிருஷ்ணன், 26வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் S.செல்வம்.B.Com (எ) செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது திருமங்கலம் நகர் நகர செயலாளர் ஜெ.டி. விஜயன், உச்சப்பட்டி செல்வம், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கரடிக்கல் ஆண்டிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கீழ் உரப்பனூர் சுமதி, கற்பகநகர் எரம்பலம்பட்டி ரவி, பொண்ணமங்கலம் ஜெய மணி, தெற்குத்தெரு அருண், திருப்பரங்குன்றம் கார்த்திக், சந்தப்பேட்டை நேதாஜி, சந்தப்பேட்டை ஜெய் முகேஷ், மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், உள்ளிட்டோர் கலந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சரும் திருமணம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் .பி. உதயகுமார் அவர்கள் பேசுகையில் கடந்த ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற போது திமுகவினர் எதிர்த்து நிற்க வழியின்றி ஒதுங்கி ஓடினர்.

ஆனால் தற்பொழுது அவர்கள் கட்சி ஆலும் கட்சி என்பதால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கொண்டு, பொதுமக்களுக்கு செய்யக்கூடிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு, கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு நான் எல்லாம் செய்தேன் என்று பிரச்சாரம் மேற்கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.

அதிமுக ஆட்சி இருந்தபோது திருமங்கலம் நகர் முழுவதும் தெரு விளக்கு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 100% பணிகள் நிறைவேற்றி கொடுத்துள்ளோம். மீண்டும் இதேபோன்று எங்கள் நகர்மன்ற வார்டு க்கு போட்டியிடும் S.அலமேலு R. பாலகிருஷ்ணன், S. செல்வம் (எ) செல்வராஜ்B.com,R.சஞ்சய் ஆகிய அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் மீண்டும் இது போன்று மக்களின் தேவைகளை அனைத்தையும் நிறைவேற்றி எங்கள் அடிமட்ட தொண்டர்கள் உட்பட அனைவரும் போராடுவோம், அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம் எனக் கூறினார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் திருமங்கலம் நகர்க்கு பேரூந்து நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம், திருமங்கலம் நகராட்சி புதிய கட்டிடம்,மக்கள் அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, பொங்கள் பரிசு,கற்பக நகர் மேம்பால பணி துவக்க ஆணை ஒதிக்கீடு,முதியோர் உதவி,போன்ற அளவில்லா திட்டங்கள், படிக்கின்ற மாணவர்களுக்கு உதவி நலதிட்ட உதவி கற்பினி பெண்கள் நலதிட்ட உதவி தாலிக்கு தங்கம் எண்ணற்ற திட்டங்களை செய்து சாதனை செய்தோம். ஆனால் தி.மு.க அனைத்தையும் மறந்து விட்டு மக்களின் நிலையை மறந்து வாய்க்கு வந்ததெல்லாம் பேசிகொண்டு பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்று கின்றனர்.மக்கள் அனைவரும் அதிமுகவிற்க்கு இரட்டை இலை சின்னத்தில் வக்களித்து திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அனல் பறக்கும் பிரச்சரம் மேற்கொண்டார்.

Tags:    

Similar News