வைகை நதியில் நீர்வரத்து அதிரிப்பு: மதுரை ஆட்சியர் எச்சரிக்கை
வைகை நதியில் நீர்வரத்து அதிரித்துள்ளதால் பொதுமக்களுக்கு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
கனமழையால், வைகை அணை 55 அடியை எட்டிய நிலையில் 969 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்திறப்புடன் மழைநீரும் சேர்ந்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகள் மோசமடைந்து வருகிறது. மதுரை நகரில், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர், சித்தி விநாயகர் கோயில் தெருவில், கண்மாய் போல மழைநீர் தேங்கியுள்ளது. மதுரை கோமதி புரம் ஆறாவது மெயின் சாலையில், கனரா வங்கி அருகே சாலைகள் மோசமாக உள்ளது.
மேலும், வீரவாஞ்சி தெரு, யாகப்ப நகர் எம்.ஜி.ஆர். தெரு, சௌபாக்ய விநாயகர் தெருவில், சாக்கடை நீர் மழைகாலத்தில் பெருக்கெடுத்து, சாலையில் தேங்கி கொசுத் தொல்லை பெருகி வருகிறது.
மதுரை மாநகராட்சி, தனி கவனம் செலுத்தி, கழிவு நீரைக் கால்வாயில் அடைப்புகளை சீரமைக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.