மதுரை மேலவாசல் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து
மதுரை மேலவாசல் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது.
மதுரை மேலவாசல் பகுதியில், உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவிருக்கு அப்பகுதியினர், பட்டாசுகள் வெடித்த போது, எதிர்பாராத விதமாக அங்கு அமைக்கபட்டிருந்த பந்தலில் தீ பற்றியது.
தொடர்ந்து, தீ வேகமாக பரவத்துவங்கியதை அடுத்த பொதுமக்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். சம்பவம் குறித்து, மதுரை டவுன் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து போராடி தீயை அனைத்தனர்.
மேலும் சம்பவத்தின் போது அங்கிருந்து மின் வயர்கள் முற்றிலும் சேதமடைந்து அந்த பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
மேலும் தீவிபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததுடன், கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பந்தல் முற்றிலுமாக எரிந்து நாசமானது.